மத்திய அரசு அறிவுறுத்தியும் பயம் மற்றும் குழப்பம் காரணமாக எங்களது 18,000 ஊழியர்கள் கரோனா தடுப்பூசி போட முன்வரவில்லை என்று விமான நிலைய ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
விமான நிலைய ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பால்ராஜ் சிங் அலவத் கூறியதாவது:
ஊழியர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இந்தியா முழுவதும் சுமார் 18,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது எங்களுடைய சங்கம். இதில் சுமார் 12,000 ஊழியர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ளனர்.
கரோனா தடுப்பூசி போட்டுகொண்ட பின்னரும் பலருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதாகவும், தடுப்பூசி போடுவதால் சில பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். தடுப்பூசி போட்டுகொண்டால் பாதிப்பு ஏற்படும் என்று பயப்படுகின்றனர். நாடு முழுவதுமுள்ள 18,000 ஊழியர்களில் 100 பேர் கூட தடுப்பூசி போடத் தயாராக இல்லை. இதனால் பணியிடத்தில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடியவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நானும் என் மனைவியும் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டோம். நாங்கள் நன்றாக இருக்கிறோம். அவசர காலம் கருதி தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தற்போது ஒருமுறை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். 100 ஊழியர்களை சேர்த்து வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி தில்லியில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


