சிவ்புரி: மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் உருளையுடனான இணைப்பை மருத்துவமனை ஊழியர் அகற்றியதால், கரோனா நோயாளி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ஸிஜன் உருளையின் இணைப்பைத் துண்டித்ததால் உயிரிழந்தவர் சுரேந்தர் ஷர்மா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
மருத்துவமனை ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அவரது மகன் கூறுகையில், எனது தந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அவரது நிலைமை சீராக இல்லை, அதனால் ஆக்ஸிஜன் சுவாசக் கருவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், நேற்று இரவில் மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்ஸிஜன் சுவாகக் கருவியை அகற்றிவிட்டனர். நான் மருத்துவமனைக்குச் சென்ற போது அவர்களிடம் ஆக்ஸிஜன் சேவையை வழங்குமாறு வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இன்று காலை எனது தந்தை உயிரிழந்துவிட்டார் என்று கனத்த இதயத்தோடு கூறுகிறார்.
இது குறித்து மூன்று மருத்துவர்கள் தலைமையில் விசாரணைக் குப அமைக்கப்பட்டு, அடுத்த 48 மணி நேரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உருளைக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


