புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தில்லியில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை: உ.பி. அரசு

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பாதிப்பு  அதிகரித்து வரும் நிலையில் தில்லியில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2021, 7:53 am

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பாதிப்பு  அதிகரித்து வரும் நிலையில் தில்லியில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. 

தில்லிக்குச் செல்லும், தில்லியில் இருந்து வரும் மக்களிடம் கரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் முயற்சியில் கௌதம புத்த நகர் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது. 

தில்லி எல்லையை ஒட்டியுள்ள உத்தரப்பிரதேச மக்களுக்கு கரோனா பரிசோதனையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் குறிப்பாக தில்லி - நொய்டா எல்லைப்பகுதியில் உள்ளவர்களுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனியா செய்யப்படும் என்று மாவட்ட சுகாதார அதிகாரி சுஹாஸ் தெரிவித்தார் 

தலைநகர் லக்னெள, கௌதம புத்த நகர் உள்ளிட்ட பகுதிகளால் உ.பி அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் புதிதாக 20,510 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 1,11,835 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.