புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கரோனா பரவல்: காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது

நாட்டில் கரோனா பரவல் நிலைமை குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 11:47 am

நாட்டில் கரோனா பரவல் நிலைமை குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை(சனிக்கிழமை) காணொலி வாயிலாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கும் இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று தெரிகிறது. 

நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி இருப்பை உறுதி செய்ய வேண்டும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். 

இதுதொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.