
புது தில்லி: சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா புது தில்லியில் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 68.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஞ்சித் சின்ஹாவுக்கு வியாழக்கிழமை இரவு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பான பிரச்னையில் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
1974 ஆவது பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரஞ்சித் சின்ஹா. இந்திய - திபெத் எல்லைக் காவல்படையின் பொது இயக்குநராகவும், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநராக 2012-ஆம் ஆண்டு சிபிஐயின் இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அந்த அமைப்பின் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.