ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு
நாடு முழுவதும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்ஸிஜன் உருளைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, கரோனா நோயாளிகள் உயிரிழப்பதாக தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அனைத்து ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களும், அதனை நிரப்பும் இடங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்திருப்பதோடு, ஆக்ஸிஜன் உருளைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...