நாட்டில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
என் அன்பு நாட்டு மக்களே, நம் அனைவருக்கும் இது மிகவும் சிக்கலான காலம். நம்முடைய குடும்பத்தினர், நண்பர்கள், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர்.
எனவே, கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எச்சரிக்கையுடனும், இரக்கத்துடனும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த கரோனா போரில் வெற்றி பெறுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
நாட்டில் நேற்று ஒரேநாளில் புதிதாக 2,17,353 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரேநாளில் 1,185 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 15,69,743 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான்

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


