புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

உ.பி.யில் கரோனா புதிய உச்சம்: ஒரேநாளில் 27,426 பேருக்கு பாதிப்பு

உ.பி.யில் புதிய உச்சமாக ஒரேநாளில் 27,426 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 11:42 am

உ.பி.யில் புதிய உச்சமாக ஒரேநாளில் 27,426 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 2- ஆம் தேதி முதல் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 2-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இதைத் தொடா்ந்து, கரோனா தொற்றை கட்டுப்படுத்தும்விதமாக மாநிலங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 27,426 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,93,720ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 103 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 9,583 பேர் பலியாகியுள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 6,429 பேர் குணமடைந்தனர். 
இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,33,461ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,50,676 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2.23 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 3.78 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 77,146 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.