
பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதி கோரியபோது, அங்கு போதிய இடமில்லாமல் அவருக்கு சிகிச்சை கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தலையிட்டும் கூட, மணிப்பால் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறித்து குமாரசாமி சுட்டுரையில் இன்று பகிர்ந்திருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைக்கவில்லை.
பெங்களூருவிலிருந்து வெளியே இருக்கும் அவரது பண்ணை வீட்டில் தங்கியிருக்க திட்டமிட்டாலும், அவருக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால், அவரது மருத்துவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.