தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

'தில்லியை விட்டு வெளியேற வேண்டாம்' - புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கேஜரிவால் கைகூப்பி வேண்டுகோள்

புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டாம் என்றும் தில்லி அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்றும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :19 ஏப்ரல் 2021, 11:23 am

DIN

புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டாம் என்றும் தில்லி அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்றும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், புது தில்லியில் இன்றிரவு முதல் ஒரு வார முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  இன்று இரவு 10 மணி முதல் ஏப்ரல் 26 காலை வரை தொடர்ந்து ஒரு வாரம் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தில்லியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

இதையடுத்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால், புலம்பெயர் தொழிலாளர்கள் யாரும் தில்லியை விட்டு வெளியேற வேண்டாம். 6 நாள்களுக்கு மட்டுமே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சென்றால் உங்கள் பயணத்திற்கே இந்த நாள்கள் சரியாகிவிடும். எனவே, இங்கேயே இருங்கள். தில்லி அரசு உங்களை கவனித்துக்கொள்ளும் என்று கைகூப்பி கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், விருப்பமில்லாமல் வேறுவழியின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வியாபாரத்தில் இழப்புகளை எதிர்கொள்கிறார்கள், குறிப்பாக ஏழை மக்களுக்கு தினசரி கூலித்  தொழிலாளர்களுக்கு இந்த காலம் மிகவும் கடினம்.

எனினும் இந்த ஆறு நாள்களில் முழுமையாக கரோனா பரவலை ஒழிக்க முடியாது என்றாலும் ஓரளவுக்கு பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.