யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ராகுல்காந்திக்கு கரோனா தொற்று: விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
ராகுல்காந்திக்கு கரோனா தொற்று: விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து
Updated On :20 ஏப்ரல் 2021, 11:22 am

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்திக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி விரைந்து குணமடைய பிராத்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சமீபத்தில் ராகுல் காந்தி மேற்குவங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அவர் மேற்குவங்கத்தில் பிரசாரத்தை தவிர்ப்பதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.