’தில்லியை விட்டு வெளியேற வேண்டாம்’: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு துணைநிலை ஆளுநர் வேண்டுகோள்
கரோனா தொற்று அதிகரிப்பால் தில்லியை விட்டு வெணியேற வேண்டாம் என துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கரோனா தொற்று அதிகரிப்பால் தில்லியை விட்டு வெணியேற வேண்டாம் என துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் தலைநகரான தில்லியில் அதிக அளவிலான மக்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதால், இரவு பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது. எனினும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்ததால் தற்போது 6 நாள்களுக்கு முழு முடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் அச்சத்தைத் தொடர்ந்து தில்லியில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் தில்லி ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதனைத் தொடர்ந்து தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், “புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லியை விட்டு வெளியேற வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...