ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கரோனாவிலிருந்து குணமடைய மன்மோகன் சிங்குக்கு தலாய் லாமா வாழ்த்து

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் விரைவில் குணமடைய திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
கரோனாவிலிருந்து குணமடைய மன்மோகன் சிங்குக்கு தலாய் லாமா வாழ்த்து
Updated On :20 ஏப்ரல் 2021, 12:24 pm

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் விரைவில் குணமடைய திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் திங்கள்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டாா்.

லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் விரைவில் குணமடைய திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். உங்களை எனது நண்பனாக எண்ணுகிறேன். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தும் நிலையில் தொற்று பாதிப்பிலிருந்து மிள்வது குறித்து நம்பிக்கை கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.