மேற்கு வங்க அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்க அமைச்சர் சாதன் பாண்டே சுவாச பிரச்னை காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மேற்கு வங்க அமைச்சர் சாதன் பாண்டே சுவாச பிரச்னை காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் சாதன் பாண்டே இன்று காலை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும், அவர் இரண்டாம் தவணையாக நேற்று கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதன்பின்னர், திரிணமூல் காங்கிரஸின் மூத்த அமைச்சர் பாண்டே மாணிக்கால தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் இன்று சிரமம் ஏற்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...