காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி

ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பருவநிலை மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
பிரதமர் மோடி
Updated On :22 ஏப்ரல் 2021, 1:08 pm

DIN

ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பருவநிலை மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் சமீப காலத்தில் அதிகம் பேசுபொருளாகி உள்ளன. காலநிலை மாற்றத்தால் அதீத வெப்பம், சீரற்ற வானிலை, மழைப்பொழிவில் மாற்றம் என முன்னெப்போதும் இல்லாத பாதிப்புகள் உணரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று காலநிலை மாற்றம் குறித்த பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

இந்த மெய்நிகர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கையின் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.