ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்கிறது: கேஜரிவால்

தில்லியில் கடந்த சில தினங்களை ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் நாள் ஒன்றுக்கு 700 டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :22 ஏப்ரல் 2021, 7:21 am

DIN

தில்லியில் கடந்த சில தினங்களை ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் நாள் ஒன்றுக்கு 700 டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்தும் வரும் அதே சூழ்நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதாக அந்தந்த மாநிலங்கள் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய  முதல்வர் கேஜரிவால், தில்லி கடந்த சில தினங்களாக ஆக்சிஜன் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் எவ்வளவு ஆக்சிஜன் தேவை என மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. தில்லி அரசின் மதிப்பீட்டின்படி, இந்கு ஒரு நாளைக்கு 700 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு இதை 378 டன்களாக நிர்ணயித்து, தற்போது 480 டன்னாக உயர்த்தியுள்ளது. ஆக்சிஜன் அளவை உயர்த்தியதற்கு நன்றி. எனினும் இது எங்களுக்கு போதாது. தில்லி மக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை வழங்க வேண்டும். 

ஒவ்வொரு மாநிலமும் ஆக்சிஜன் தேவையை அதிகரிக்கக் கோரி வருகிறது. இந்த பேரிடர் காலத்தில் மாநிலங்கள் ஒன்றுக்கொன்று உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.