தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்கும் ஹரியாணா
தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்க ஹரியாணா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதிப்படுத்தியுள்ளார்.


தில்லிக்கு ஆக்ஸிஜன் வழங்க ஹரியாணா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய முதல்வர் கேஜரிவால், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஹரியாணாவிலிருந்து தில்லிக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொண்டுவருவதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.
இது தொடர்பாக பேசிய மனோகர் லால் கட்டார், ஹரியாணா மாநிலம் பானிபட் பகுதியில் 260 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தில்லிக்கு வழங்கப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...