மத்திய அரசுக்கு கரோனா தடுப்பூசி என்ன விலையில் கொடுக்கப்படுகிறதோ அதே விலையில் மாநில அரசுகளுக்கும் வழங்க வேண்டும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்தார்.
கரோனா பரவல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதில் கலந்துகொண்ட சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் கரோனா தடுப்பூசிகளின் விலை மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மத்திய அரசுக்கு என்ன விலைக்கு அளிக்கப்படுகிறதோ அதே விலைக்கு மாநில அரசுகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் மாநிலங்கள், மற்ற மாநிலங்களுக்கு வழங்குவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர் மே 1 முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான செயல் திட்டத்தை விரைந்து வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், சுகாதார அதிகாரிகள், பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவா்களிடையே தற்கொலை எண்ணங்களை தடுக்க புதிய மனநலக் கொள்கை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் இதுவரை 44,396 மாணவா்கள் சோ்க்கை
துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள்: 3 மாதங்களுக்குப் பிறகு மீட்டா்களை அகற்ற உத்தரவு

ஆட்டிஸம் பாதித்தோருக்கு புறநோயாளிகள் சேவையில் முன்னுரிமை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

