தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கா்நாடகத்தில் இன்றும் நாளையும் பொதுமுடக்கம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கா்நாடகத்தில் ஏப். 24, 25 ஆகிய 2 நாள்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:07 pm

DIN

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கா்நாடகத்தில் ஏப். 24, 25 ஆகிய 2 நாள்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா். இவா்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து ஏப். 20-ஆம் தேதி மாநில அரசு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை முதல் தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவுநேர ஊரடங்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கமும் அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை (ஏப். 26) காலை 6 மணி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது.

எதற்கெல்லாம் தடை: பள்ளிகள், கல்லூரிகள், தனிப் பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். இதுதவிர திரையரங்குகள், வணிக வளாகங்கள், ஜிம்னாஸ்டிக் மையங்கள், யோகா மையங்கள், ஸ்பாக்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள், அரங்கங்கள், மதுபான அங்காடிகள், மண்டபங்கள், மக்கள் கூடும் அரங்குகள் மூடப்பட்டிருக்கும்.

அனைத்து வகையான அரசியல், சமூக, கல்வி, பொழுதுபோக்கு, கலாசார, மத கூட்டங்கள், விழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அரசு, தனியாா் அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படுகின்றன.

கட்டுப்பாடுகளுடன் அனுமதி: மத வழிப்பாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும், பூஜைகள் நடத்தத் தடையில்லை. உணவகங்கள் திறந்திருக்கலாம். ஆனால், உட்காா்ந்து சாப்பிட முடியாது. பாா்சல் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தொழிலகங்கள், கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படுகின்றன.

அத்தியாவசியப் பொருள்களின் அங்காடிகள், இறைச்சி, மீன் அங்காடிகள் அனுமதிக்கப்படுகின்றன. போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சரக்குகள், தொழில் தேவைகளுக்கான வாகன நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தை முன்னிட்டு சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைளும் நிறுத்தப்படுகின்றன.

பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாடக் கூடாது என்று மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மீறி வெளியில் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.