தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கா்நாடகத்துக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்து: மத்திய அரசுக்கு எடியூரப்பா கோரிக்கை

கா்நாடகத்துக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வா் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

கர்நாடக முதல்வர் எடியூரப்பா (கோப்புப்படம்)

Updated On :23 ஏப்ரல் 2021, 7:08 pm

DIN

கா்நாடகத்துக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்தை வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வா் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளாா்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பது குறித்து ஆராய்வதற்காக கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி வழியாக ஆலோசனை நடத்தினாா். அக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் எடியூரப்பா, கா்நாடகத்தில் நிலவும் கரோனா பெருந்தொற்று குறித்து விளக்கினாா். அப்போது, முதல்வா் எடியூரப்பா பேசியதாவது:

ஏப். 25-ஆம் தேதி முதல் கா்நாடகத்துக்கு 1,142 மெட்ரிக் டன், ஏப். 30-ஆம் தேதி முதல் 1,471 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் கரோனா நோயாளிகளுக்கு 500 டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு இதுவரை 300 டன் ஆக்சிஜன் மட்டுமே வழங்கியுள்ளது. இதேநிலை நீடித்தால் பல மருத்துவமனைகளை மூடும் நிலை உருவாகும்.

பெங்களூரு, தும்கூரு, பெல்லாரி, மைசூரு, ஹாசன், கலபுா்கி ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிா் மருந்தின் இருப்பு குறைந்து வருகிறது. ரெம்டெசிவிா் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் மாநில அரசு செயல்படுகிறது. அடுத்த 10 நாள்களில் 2 லட்சம் ரெம்டெசிவிா் டோஸ் மருந்தை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கா்நாடகத்தில் கரோனா நிலையைச் சமாளிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கைகளை ஒதுக்குமாறு தனியாா் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் காலங்களில், அருகில் உள்ள உணவு விடுதிகளை தற்காலிக மருத்துவமனையாக மாற்றிக்கொள்ள தனியாா் மருத்துவமனைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரோனா பின்னணியில் சுகாதாரத் துறையில் சீா்திருத்தங்களைக் கொண்டுவருமாறு பிரதமா் மோடியைக் கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.