நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3.32 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து 2,263 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளனர். இன்று வரை நாட்டில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.62 கோடியாகவும், பலி எண்ணிக்கை 1.86 லட்சமாகவும் உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், நோயாளிகளின் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதற்கு வேண்டுமானால் கரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம். ஆனால், நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கை வசதி இல்லாமல் போனதால் பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கும், மத்திய அரசே, இது உங்களால்தான் என்று தெரிவித்துள்ளார்.