கரோனா பரவல்: உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2 வரை மூடல்

கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2-ம் தேதி வரை மூடப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 
உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2 வரை மூடல்
உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2 வரை மூடல்

கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2-ம் தேதி வரை மூடப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 

நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின்படி, 

கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கோட்வார் மற்றும் ஸ்வர்காஷ்ரம் பகுதிகளில் ஏப்ரல் 26 முதல் மே 3 வரை மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு அறிவித்துள்ளது. 

அவசர விசாரணை தொடர்பான விண்ணப்பங்களை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும், வழக்குகளில் விசாரணை மே மாதம் முதல் விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கரோனா இரண்டாம் அலை அதிகரித்து வருவதையடுத்து மாநிலத்தில் முழுமையான ஊரடங்கு விதிக்குமாறு அமைச்சர்கள் சிலர் வற்புறுத்தி வருகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரேநாளில் 81 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com