மகாராஷ்டிரத்தில் 15 நாள்களுக்கு பொது முடக்கம் நீட்டிப்பு: அமைச்சர்
மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 30-க்குப் பிறகு மேலும் 15 நாள்களுக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என மாநில பொது சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் புதன்கிழமை அறிவித்தார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 30-க்குப் பிறகு மேலும் 15 நாள்களுக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என மாநில பொது சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் புதன்கிழமை அறிவித்தார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
"முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பொது முடக்கத்தை நீட்டிக்கக் கோரி அனைவரும் குரல் எழுப்பினர். எனவே அது 15 நாள்களுக்கு நீட்டிக்கப்படும்."
இதுபற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் முறையாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை வார இறுதி பொது முடக்கம் மற்றும் இரவு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தனியார் அலுவலகங்கள், திரையரங்குகள் மற்றும் சலூன் கடைகள் உள்ளிட்டவற்றை மூட அரசு உத்தரவிட்டது.
தற்போதைய நிலையில் வார இறுதி பொது முடக்கம் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நிறைவடைகிறது.
மளிகை கடைகள், காய் கடைகள் உள்ளிட்டவை காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...