கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா: அரசாணை வெளியீடு

தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும், தில்லி தேசியத் தலைநகர திருத்த சட்ட மசோதா ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

News image
தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா: அரசாணை வெளியீடு
Updated On :28 ஏப்ரல் 2021, 7:43 am

DIN

தில்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வகை செய்யும், தில்லி தேசியத் தலைநகர திருத்த சட்ட மசோதா ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தில்லியில் மாநில அரசைவிட துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதன் மூலம் அந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஏற்கனவே, ‘தில்லி அரசு திருத்த மசோதா 2021’ என்ற அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்திருப்பதை அரசிதழ் அறிவிக்கையின் மூலம் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தச் சட்டத்தின்படி, தில்லி அரசானது எந்த நிா்வாக நடவடிக்கையை எடுக்கும் முன் துணைநிலை ஆளுநரின் கருத்தை கேட்க வேண்டும். இந்த மசோதா மக்களவையில் மாா்ச் 22-ஆம் தேதியும், மாநிலங்களவையில் மாா்ச் 24-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.