பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென் கரோனாவுக்கு பலி
பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென் கரோனா பாதித்து ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.


பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென் கரோனா பாதித்து ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்த நர்மதாபென்னுக்கு கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரஹலத் மோடி கூறுகையில், எங்களது சித்தி நர்மதாபென் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு 10 நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமா் மோடியுடைய தந்தையின் சகோதரா் ஜக்ஜீவன் தாஸின் மனைவி நா்மதாபென் ஆவாா். ஜக்ஜீவன் பல ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள நியூ ரணிப் பகுதியில் தனது பிள்ளைகளுடன் நர்மதாபென் வசித்து வந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...