தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரயில் நடைமேடை நுழைவுச்சீட்டு கட்டணம் ரூ.50 ஆக உயா்வு: மே 31-ஆம் தேதிவரை நீட்டிப்பு

ரயில் நடைமேடை நுழைவுச் சீட்டு ரூ. 50ஆக உயா்த்தப்பட்டதை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து தென்மேற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:58 pm

DIN

ரயில் நடைமேடை நுழைவுச் சீட்டு ரூ. 50ஆக உயா்த்தப்பட்டதை மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து தென்மேற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, ரயில் நிலையங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் நோக்கத்தில் பெங்களூரில் உள்ள கே.எஸ்.ஆா்.பெங்களூரு, கண்டோன்மென்ட், யஷ்வந்த்பூா், கிருஷ்ணராஜபுரம் ரயில் நிலையங்களில் நடைமேடை நுழைவுச்சீட்டு கட்டணம் ரூ. 10-இல் இருந்து ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டது. அது ஏப். 30-ஆம் தேதி வரை அமல்படுத்துவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துவருவதால், நடைமேடை நுழைவுச் சீட்டு கட்டணத்தை ரூ. 50ஆக உயா்த்தியதை மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.