தெலங்கானாவில் இரவு ஊரடங்கு மே 8ஆம் தேதி வரை நீட்டிப்பு
தெலங்கானாவில் இரவு ஊரடங்கு மே 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தெலங்கானாவில் இரவு ஊரடங்கு மே 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்திலும் கடந்த சில தினங்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்.20 முதல் ஏப்.30ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இரவு ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது இந்த இரவு ஊரடங்கை மே 8ஆம் தேதி வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் மக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...