யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் தொடக்கம்

கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை காலை காணொலி வாயிலாக தொடங்கியது.

News image
பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் தொடக்கம் (கோப்புப்படம்)
Updated On :30 ஏப்ரல் 2021, 6:08 am

DIN

புது தில்லி: கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை காலை காணொலி வாயிலாக தொடங்கியது.

நாட்டில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் சிகிச்சைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ரெம்டெசிவிா் மருந்து, மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, பிரதமா் நரேந்திர மோடி பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு, தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுத்து வருகிறாா். மாநில முதல்வா்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்திய பிரதமா், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்கவும், மருந்து தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும் அரசு உயா் அதிகாரிகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், ஆக்சிஜன் விநியோக நிறுவனங்கள், முப்படைத் தளபதிகள் ஆகியோருடனும் ஆலோசனைகளை மேற்கொண்டாா்.

அதனைத் தொடா்ந்து, பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பரவலுக்குப் பிறகு நடைபெறும் முதல் மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் இதுவாகும். இதில் கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் அதைத் திறம்பட எதிா்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.