மாநிலங்களின் கையிருப்பில் 3 கோடி தடுப்பூசிகள்: மத்திய அரசு
மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 3 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 3 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மொத்தம் 49,49,89,550 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கொண்டு 8,04,220 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இதில் வீணானவை உள்பட மொத்தம் 46,70,26,662 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது ஞாயிறு காலை 8 மணி நிலவரப்படி.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 41,381 பேருக்கு கரோனா
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 3 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் (3,00,58,190) இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன."
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60,15,842 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...