
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது, தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருகிறது.
கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதிக அளவிலான நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 44 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு விகிதம் 10 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் கரோனா இரண்டாம் அலை முற்றிலும் குறையவைல்லை என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.