சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அமிதாப் பச்சனின் வீடு, ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்...மும்பையில் பரபரப்பு

மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கும் ரயில் நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஆகஸ்ட் 2021, 9:35 am

DIN

மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சன் வீட்டிற்கும் ரயில் நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள நான்கு இடங்களுக்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு இருவரை இன்று (சனிக்கிழமை) கைது செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "நடிகர் அமிதாப் பச்சனின் பங்களா, மூன்று ரயில் நிலையங்களுக்கு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். 

பின்னர், பொய்யான வெடு குண்டு மிரட்டல் என தெரியவந்தது. இது தொடர்பாக மும்பை காவல்துறையின் குற்றப் புலனாய்வு பிரிவு இருவரை கைது செய்துள்ளது. நேற்று இரவு காவல்துறைக்கு வந்த பொய்யான வெடி குண்டு மிரட்டல் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாதர், பைக்குல்லா, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்கள், அமிதா பச்சனின் வீடு ஆகியவற்றில் வெடி குண்டு வைக்கப்பட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் தெரிவித்தார்.

இதையடுத்து, மும்பை காவல்துறை, ரயில்வே காவல்துறை, வெடி குண்டு நிபுணர்கள் ஆகியோர் அந்த நான்கு இடங்களுக்கு சென்று சோதனை நடத்தியதில் அது பொய்யான தகவல் என தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.