அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

பஞ்சாபில் அகாலி தள இளைஞரணித் தலைவர் சுட்டுக்கொலை

பஞ்சாபில் அகாலி தள இளைஞரணித் தலைவர் விக்ரம்ஜித் சிங் மர்மநபர்களாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 4:12 pm

DIN

பஞ்சாபில் அகாலி தள இளைஞரணித் தலைவர் விக்ரம்ஜித் சிங் மர்மநபர்களாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபின் அகாலி தள இளைஞரணி தலைவர் விக்ரம்ஜித் சிங் மிதுக்கேரா. இவர் இன்று காலை மொகாலி அருகே காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இவரது காரை வழிமறித்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் விக்ரம்ஜித் சிங்கை நோக்கி சுமார் 20 குண்டுகள் வரை சுட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் எஸ்எஸ்பி சதீந்தர் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பான விடியோவையும் கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

சுட்டுக்கொல்லப்பட்ட விக்ரம்சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். பட்டப்பகலில் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.