புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம், நேயம் மக்கள் கழகம் என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல்முறையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையை ஏற்றுக்கொண்டு நேயம் மக்கள் கழகம் என்ற கட்சி தவெகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 பேரவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மாா்ச் 23) நிறைவடைகிறது.
இந்த நிலையில், பேரவைத் தோ்தலில் முதல்முறையாக களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டு இருந்தது.
அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அந்தக் கட்சித் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம், நேயம் மக்கள் கழகம் என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரியில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், புதுச்சேரி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, "நேயம் மக்கள் கழகம்" நிறுவனத் தலைவர் ஜி. நேரு (எ) குப்புசாமி எம்.எல்.ஏ, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் "உருளையன்பேட்டை" மற்றும் "தட்டாஞ்சாவடி" ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
The Tamil Nadu Victory Party (TNVP) leadership has officially announced that it has formed an alliance with the Neyam Makkal Kazhagam party in Puducherry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்! தவெக பிரசாரம் ரத்து ஏன்? விஜய் பதில்!

’குழப்பக் கூட்டணி - சோா்ந்த கூட்டணி’: புதுச்சேரியில் விஜய் விமா்சனம்

தவெக வேட்பாளா்கள் நாளை அறிமுகம்

புதுச்சேரி தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


