முடிவுக்கு வரும் ஜெஃப் பெசோஸ், நாராயண மூர்த்தியின் கூட்டணி..அமேசான் நிறுவனத்திற்கு பின்னடைவு

ஜெஃப் பெசோஸ், நாராயண மூர்த்தி ஆகியோர் இணைந்து நடத்திவந்த கூட்டு நிறுவனம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெஃப் பெசோஸ், நாராயண மூர்த்தி ஆகியோர் இணைந்து நடத்திவந்த கூட்டு நிறுவனம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியுடன் இணைந்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கூட்டு நிறுவனத்தை நடத்திவந்தார். தற்போது, இந்த கூட்டு நிறுவனம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இணைய சந்தை 1 டிரில்லியன் டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அமேசான் நிறுவனத்திற்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

ஜெஃப் பெசோஸ், நாராயண மூர்த்தி ஆகியோர் இணைந்து நடத்திவந்த பிரியோன் பிசினஸ் சர்வீசஸ் பிரைவேட் என்ற கூட்டு நிறுவனம், 2022ஆம் ஆண்டுக்கு மத்தியில் அதன் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிகர்கள், தங்களின் பொருள்களை இணையத்தில் விற்பனை செய்ய உதவும் வகையில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த கூட்டு நிறுவனத்தின் உதவியில் 3 லட்சம் விற்பனையாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் இணையம் மூலம் விற்பனை செய்ய தொடங்கினர். அதுமட்டுமின்றி, 4 லட்சம் விற்பனையாளர்கள் டிஜிட்டல் தளத்தில் பண பரிமாற்றத்தை மேற்கொள்ள உதவி செய்யப்பட்டது.

இந்திய இணைய வர்த்தக விதிகளை மீறியதாக கூட்டு நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதேபோல், அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் வா்த்தக நடவடிக்கைகளில் இந்தியாவின் தொழில்போட்டிக்கான சட்டங்களை மீறி செயல்படுகிறதா என்பது குறித்து முதல்கட்ட விசாரணை மேற்கொள்ள சிசிஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம், அமேசான் நிறுவனத்திற்கு பெரும் அழுத்தம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com