புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாட்டில் இதுவரை 54 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள்: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 54 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 11:49 am

DIN

நாட்டில் இதுவரை 54 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று காலை 7 மணிக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 61,35,193 முகாம்களில் 54,38,46,290 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 73,50,553 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,13,76,015 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 37,927 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.46 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,083 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 49 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,85,336 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.20 சதவீதம் மட்டுமே ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 19,23,863 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 49,36,24,440 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.00 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.88 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது.
தொடர்ந்து 20 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 69 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.