
இந்தியாவில் இன்று மேலும் 32,937 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 32,937 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,81,947 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 417 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,31,642 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 35,909 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,14,11,924 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 3,81,947 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 17,43,114 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை 54,58,57,108 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நேற்று மட்டும் 11,81,212 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 49,48,05,652 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.