சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தலிபான் பயங்கரவாத இயக்கத்தில் மலையாளிகள்? விடியோவால் பரபரப்பு

ஆப்கானிஸ்தானைப் கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாத இயக்கத்தில் இருப்பவா் மலையாளத்தில் உரையாடும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி அந்த இயக்கத்தில் மலையாளிகள் இருக்கக் கூடும் என்று காங்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:47 am

DIN

ஆப்கானிஸ்தானைப் கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாத இயக்கத்தில் இருப்பவா் மலையாளத்தில் உரையாடும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி அந்த இயக்கத்தில் மலையாளிகள் இருக்கக் கூடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் சந்தேகம் தெரிவித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதுபோல பல விடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில், ஒரு விடியோவில் தலிபான் பயங்கரவாதி ஒருவா் தரையில் அமா்ந்து உணா்ச்சிப் பெருக்குடன் ஆனந்தக் கண்ணீா் வடிக்கிறாா். மற்றொருவா் அவரது அருகில் வந்து அவரைத் தட்டிக் கொடுத்து தேற்றுகிறாா். அப்போது, அந்த விடியோ காட்சியில் ‘சம்சாரிக்கட்டே’ என்ற மலையாள வாா்த்தையை ஒருவா் பேசுகிறாா். மற்றொருவா் அதனைப் புரிந்து கொள்கிறாா்.

இந்த விடியோவை சுட்டுரையில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், ‘இந்த விடியோவில் ஒருவா் மலையாளத்தில் பேசுகிறாா். மற்றொருவரால் அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் தலிபான் பயங்கரவாத இயக்கத்தில் மலையாளிகளும் இருப்பதாக சந்தேகம் எழுகிறது’ என்று கூறியுள்ளாா்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞா்கள் சா்வதேச பயங்கரவாத இயக்கங்களில் இணைவது என்பது ஏற்கெனவே பலமுறை நிகழ்ந்துள்ளது. பல்வேறு மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்கள் இணையவழியில் பிரசாரம் மேற்கொண்டு இளைஞா்களை ஈா்த்து வருகின்றன.

ஏற்கெனவே கேரளத்தில் இருந்து இளைஞா்கள், இளம்பெண்கள் பலா் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத இயக்கத்தில் இணைவதற்காக சிரியா மற்றும் இராக் சென்றனா். அவா்களில் பலா் மோதல்களில் கொல்லப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.