
இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா என்று கேரள உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.
செளதியில் பணிபுரியும் கேரளத்தை சேர்ந்த ஒருவர், இரு தவணை கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், அரபு நாடுகளில் அந்த தடுப்பூசி ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய அரசு, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால், மீண்டும் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளக் கூடாது என்று பதிலளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.