உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பி.வி. நாகரத்னா பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜியம், ஒன்பது நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னாவின் பெயரையும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பி.வி. நாகரத்னா. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நாகரத்னாவின் தந்தை இ.எஸ். வெங்கடராமையா, 1989 ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார். ஹீமா கோஹி, பீலா திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகளின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதியாக பெண்களை நியமிக்க வேண்டும் என நீண்ட காலமாகவே கோரிக்கை இருந்துவருகிறது. மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலாக பொறுப்பு வகித்த பி.எஸ். நரசிம்மா, நீதிபதிகள் அபய் ஸ்ரீநிவாஸ் ஒகா, விக்ரம் நாத், ஜே.கே. மகேஷ்வரி, சி.டி. ரவிகுமார், எம்.எம். சுந்தரேஸ் ஆகியோரின் பெயர்களையும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கொலிஜியத்தின் பரிந்துரையின்படி, சீனியாரிட்டியின் அடிப்படையில் 2027ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நாகரத்னா பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்! 400 பேர் பலி!!

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

