உ.பி.யில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23-இல் பள்ளிகள் திறப்பு
உத்தரப் பிரதேசத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.


உத்தரப் பிரதேசத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.
அங்கு 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தது:
"ஆகஸ்ட் 23 முதல் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன."
உத்தரப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 27 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 420 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...