
காங்கிரஸ் மூத்த தலைவா் சசி தரூரை அவரது மனைவி சுனந்தா புஷ்கா் மரண வழக்கு விசாரணையிலிருந்து விடுவிப்பதாக தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல், இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சுனந்தா புஷ்கர் மரண வழக்கு விசாரணையிலிருந்து சசி தரூரை விடுவிப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவைக் கேட்ட சசி தரூர், நீதிபதிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு, இந்த விவகாரம் கடந்த ஏழரை ஆண்டுகளாக தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், தற்போது அதிலிருந்து தனக்கு மிகப்பெரிய விடுதலை கிடைத்திருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிக்கலாமே.. 'நம்பி ஏமாறாதீர்கள்.. இப்படியும் சொல்வார்கள்' காவல்துறை அலர்ட்
கடந்த 2014, ஜனவரி 17-ஆம் தேதி தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் அறையில் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சுனந்தா புஷ்கரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அவரது கணவா் சசி தரூா் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், சுனந்தா புஷ்கர் மரண வழக்கிலிருந்து சசி தரூர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.