இவர்தான் பொருளாதார சீர்திருத்தத்தின் தந்தை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி புகழாரம்

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்தான் இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் தந்தை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா புகழாரம் சூட்டியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்தான் இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் தந்தை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா புகழாரம் சூட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான நரசிம்மராவ்தான் இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் தந்தை என்றும் அவர் காலக் கட்டத்தில்தான் நாட்டில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச நடுவர் மற்றும் மத்தியஸ்தர் மையத்தில் பேசிய அவர், "ஒரு பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதே இந்திய கலாசாரத்தின் ஒர் அங்கம். சர்வதேச நடுவர் மற்றும் மத்தியஸ்தர் மையத்தை ஹைதராபத்தில் அமைப்பதுதான் சரி. அதற்கான அனைத்து தகுதிகளும் அதற்கு உண்டு. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்த மையத்தின் மூலம் தீர்வு காண்பதால் ஏற்படும் செலவு குறைவு.

இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் தந்தை வேறு யாரும் அல்ல பி.வி. நரசிம்மராவ்தான். தெலங்கானா மண்ணின் மைந்தன். அவர் ஆட்சியின்போதுதான், இங்கு பொருளார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. 

மத்தியஸ்தம் என்பது புதியது அல்ல. இந்திய கலாசாரத்தில் அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்போம். குழந்தைகள், சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் உரையாடல் மேற்கொள்வோம்" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com