மகாராஷ்டிர முதல்வர் மீது சர்ச்சை கருத்து: மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மீது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை நாசிக் காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
மத்திய அமைச்சர் நாராயண் ராணே
மத்திய அமைச்சர் நாராயண் ராணே

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மீது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ராணேவை நாசிக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ராய்காட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், “மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன்” எனக் கூறினார்.

அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் மற்றும் புணே காவல் நிலையங்களில் சிவசேனை அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை இன்று காலை பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் நாராயண் இல்லத்திற்கு சென்ற நாசிக் காவல்துறையினர் விசாரணைக்காக ரத்னகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com