‘விற்பனை செய்ய இது ஒன்றும் உங்கள் சொத்துகள் அல்ல’: மத்திய அரசை விளாசும் மம்தா
நாட்டின் சொத்துக்களை பிரதமர் மோடியோ அல்லது பாஜகவினரோ சொந்தம் கொண்டாட முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


நாட்டின் சொத்துக்களை பிரதமர் மோடியோ அல்லது பாஜகவினரோ சொந்தம் கொண்டாட முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குத்தகை விடும் தேசிய பணமாக்கல் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டின் சொத்துக்களை பாஜக சொந்தம் கொண்டாட முடியாது என விமரிசனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்களிடையே பேசிய அவர், “அதிர்ச்சி தரும் இந்தத் திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். மத்திய அரசு அறிவித்துள்ளவை நாட்டின் சொத்துக்கள். அவற்றை மத்திய அரசு அவர்களின் விருப்பங்களுக்கேற்ப விற்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | மேக்கேதாட்டு விவகாரம்: நீர்வளத் துறை அமைச்சருடன் பொம்மை பேச்சு
இதற்காக பாஜக வெட்கப்பட வேண்டும். நாட்டின் சொத்துக்களை விற்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...