கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தாணேவில் தடுப்பூசி கொள்ளை: வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனப் புகார்

தாணேவில் தடுப்பூசி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

News image

தாணேவில் தடுப்பூசி கொள்ளை: வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனப் புகார்

Updated On :25 ஆகஸ்ட் 2021, 12:19 pm


தாணேவில் தடுப்பூசி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

தாணே பகுதி மேயர் சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உள்ளாட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தாணே தடுப்பூசி மையத்தில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு 40 டோஸ் தடுப்பூசிகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. 

அந்த தடுப்பூசிகள் தாணேவில் உள்ள முடி மாற்று சிகிச்சை மையத்தில் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து அந்த மையத்திற்கு சீல் வைத்து தடுப்பூசிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். 

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிய நிலையில், இதுவரை கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், உள்ளாட்சி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.