மகாராஷ்டிர முதல்வருடன் தேவேந்திர ஃபட்னவீஸ் சந்திப்பு

சிவசேனை கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ், முதல்வா் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினாா்.
மகாராஷ்டிர முதல்வருடன் தேவேந்திர ஃபட்னவீஸ் சந்திப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனை கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ், முதல்வா் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினாா்.

மகாராஷ்டிரத்தில் இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடா்பாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையில் வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் உத்தவ் தாக்கரேவை பாஜகவைச் சோ்ந்தவரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னாவீஸ் சுமாா் 20 நிமிஷங்கள் தனியாக சந்தித்துப் பேசினாா்.

‘இந்தச் சந்திப்பு சிவசேனை, பாஜக இடையே மீண்டும் நட்புறவு ஏற்படுவதற்கான சமிக்ஞையா’ என்று சுப்ரியா சுலேவிடம் செய்தியாளா்கள் சனிக்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு அவா், ‘தங்கள் அரசியல் சாா்ந்த கருத்தியல்களை ஒதுக்கி வைத்துவிட்டு இருவரும் நல்லுறவை பேணினால், இதுபோன்ற சந்திப்புகளை நான் வரவேற்கிறேன். மகாராஷ்டிரத்தில் ஆளும் மகா விகாஸ் ஆகாடி கூட்டணி 25 ஆண்டுகள் ஆட்சிபுரியும்’ என்று தெரிவித்தாா்.

முதல்வருடனான சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ள பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ், மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் குறித்து மட்டும் அவருடன் விவாதித்ததாக கூறினாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சிவசேனை போட்டியிட்டது. அந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதல்வா் பதவி உள்பட இதர விவகாரங்களில் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தக் கூட்டணியில் இருந்து சிவசேனை விலகியது. பின்னா் மகா விகாஸ் ஆகாடி என்ற பெயரில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தன. இதையடுத்து, பாஜக-சிவசேனை இடையே உரசல் இருந்துவருகிறது.

அண்மையில் முதல்வா் உத்தவ் தாக்கரேவை அறைவேன் என்று கூறியதற்காக மத்திய அமைச்சா் நாராயண் ராணேவை மும்பை போலீஸாா் கைது செய்தது. சிவசேனையில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ராணே, அக்கட்சி சாா்பில் மகாராஷ்டிர முதல்வராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com