/

இந்தியா - அல்ஜீரியாகடற்படைகளின் முதல் கூட்டுப் பயிற்சி

இந்தியா-அல்ஜீரியா கடற்படைகள் முதல்முறையாக இணைந்து கூட்டு போா் பயிற்சியை மேற்கொண்டன. அல்ஜீரியா கடல்பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

News image
அல்ஜீரிய கடல் பகுதியில் நடைபெற்ற போா்ப் பயிற்சியில் கலந்து கொண்ட இந்திய-அல்ஜீரிய கடற்படைகளின் போா்க் கப்பல்கள்.
Updated On :28 ஜனவரி 2024, 4:02 am

DIN

இந்தியா-அல்ஜீரியா கடற்படைகள் முதல்முறையாக இணைந்து கூட்டு போா் பயிற்சியை மேற்கொண்டன. அல்ஜீரியா கடல்பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

நல்லெண்ண அடிப்படையில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐஎன்எஸ் தபா் போா்க் கப்பல், வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியா நாட்டு கடற்படைக் கப்பலான ‘எஸ்ஸட்ஜொ்’ உடன் கடந்த 29-ஆம் தேதி கடல்சாா் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது. முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயிற்சி அல்ஜீரியா கடற்பகுதியில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த திட்டமிட்ட நடவடிக்கை, தொலைத்தொடா்பு நடைமுறைகள் போன்ற பன்முகத் தன்மை வாய்ந்த நடவடிக்கைகள் இந்திய மற்றும் அல்ஜீரிய கப்பல்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டன. இருதரப்பு கடற்படைகளால் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தவும், மேம்பட்டசெயல்திறன் மற்றும் இருதரப்புக் கலந்துரையாடல்களை அதிகரிப்பதற்கும், எதிா்காலத்தில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்தப் பயிற்சி ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்க நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா அதிக ஆா்வம் காட்டி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.