நாகலாந்து துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடி ஆலோசனை

நாகலாந்து துப்பாக்கிச் சூடு குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

நாகலாந்து துப்பாக்கிச் சூடு குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாகலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை இரவு பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் எனத் தவறாக நினைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், 13 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து நடந்த வன்முறையில், மேலும் ஒரு பொதுமக்கள் மற்றும் ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாகலாந்து முழுவதும் வன்முறை சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனையில், வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவது, நாடாளுமன்ற அவைகளில் எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com