மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: நாடாளுமன்றத்தில் இன்று அமித் ஷா விளக்கம்

நாகலாந்தில் மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை விளக்கம் அளிக்கவுள்ளார்.
மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: நாடாளுமன்றத்தில் இன்று அமித் ஷா விளக்கம்

நாகலாந்தில் மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை விளக்கம் அளிக்கவுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தின் மியான்மர் எல்லையை ஒட்டிய மோன் மாவட்டத்தில் பங்கரவாதிகள் எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓடிங்-திரு கிராமத்திற்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, ஓடிங்-திரு கிராமத்திற்கு சென்ற பாதுகாப்புப் படையினர், அங்கு ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டு இருந்த ஒடிங் மற்றும் திரு கிராம தொழிலாளர்களை பயங்கரவாதிகள் எனக் கருதி அவர்கள் மீது சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 

இதில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பின்பு, துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிராம மக்களிடையே பரவியதையடுத்து பாதுகாப்புப் படையினர் மீது மக்கள் ஒன்றுகூடு தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சில வீரர்கள் காயமடைந்ததாகவும் ஒருவர் பலியானதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வன்முறை குறித்து விசாரிக்க உயர்நிலை விசாரணைக் குழு ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முதல்கட்ட அறிக்கையின் விளக்கத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று வழங்கவுள்ளார்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எதிராக இன்றைய நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com