
தமிழகத்தைத் தொடர்ந்து கேரளத்திலும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளத்தில் கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.120 வரை விற்கப்படுகிறது.
பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தக்காளி விலை ரூ.120 முதல் ரூ.130 வரை உயா்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ரூ.70 முதல் ரூ.95 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தைத் தொடர்ந்து கேரளத்திலும் தக்காளி விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கேரளத்திலும் தொடர் மழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், தக்காளி விலை அதிகரித்துள்ளது.
கேரளத்தில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 140 முதல் 160 வரை விற்பனையாகிறது. மொத்த விற்பனையில் ரூ. 120 வரை விற்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.